கோலிஎன்று நாங்கள் செல்லமாய் அழைக்கும்
கோலிசிஸ்ட்டீஸ்- வலப்பக்கம் நடுவயிற்றில்,
வலியுடன் வாந்தியும் சேர- அறுவைசிகிச்சைக்கு
வந்தவொருத்தி, வயதானவள், கீழ்தாடையில்
ஆட்டமில்லா ஒத்தைப்பல்லுடன் ஆப்ரேஷன்
அரங்கத்தில் கிடத்தப்பட்டாள், மயக்கநிலையில்
ஆழ்த்தவும், அதனைத் தொடர்ந்து அறுவைக்கும்.
அவ்வொத்தை பல்லுக்குச் சேதமில்லாது சொருகி,
அனெஸ்தீசியாவைத் தொடரந்தேன்; அறுவையும்
அடுத்துத்தொடர, அரைமணிநேரத்தில் முடிந்தது!
எடுத்தபித்தநீர்பையை வகிர்ந்ததில் பித்தக்கற்கள்
எண்ணற்று வெளிவந்தன, அற்புதக் காட்சிதான் !
காயத்தில்கட்டு போட்டு, நோயாளி வார்டு அனுப்ப
கவனத்துடன் கவனித்து, சிகிச்சை பூர்த்தியாகி,
பத்துநாட்களில் டிஸ்சார்ஜ் செய்து, வெளிநோயாளி
பகுதியில் தொடர்ந்து கவனிப்பார்கஅவளை !
No comments:
Post a Comment